ஒரு வேண்டுகோள்

நண்பர்களே,

செங்கொடி தளத்தின் இடுகைகளை முழுமையாக பார்வையிடுவதற்கும், உங்கள் பின்னூட்டங்களை பதிவதற்கும் senkodi.wordpress.com க்கு வருகை தாருங்கள்.

தோழமையுடன்
செங்கொடி

Tuesday, August 31, 2010

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்

நூலகத்தில் புதியது



இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும் 

இந்திய அணுசக்தித் திட்டத்தின் பிதுக்கப்படும் தகவல்களுக்கு எதிராக‌ உண்மை நிலையை விளக்கும், அனைவரும் தவறாமல் படிக்கவேண்டிய கட்டுரை


Monday, August 30, 2010

அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது



கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ள‌து. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!)  நடைபெற்றது.
இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான்.

Wednesday, August 25, 2010

நாங்கள் வரலாறு படைத்தோம்

நூலகத்தில் புதியது


நாங்கள் வரலாறு படைத்தோம்.

வீரம் செறிந்த தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்ற வீராங்கணைகளின் பதிவு. போராட்டத்திற்கான உள்மனத் தூண்டுதலை தரும் தொகுப்பு

Monday, August 23, 2010

ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௪

மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி. ஆதி மனித இனம் தோன்றியபோதே மொழியறிவு அவனுக்கு எட்டியிருக்கவில்லை. அவனது பாதுகாப்பற்ற சூழல் இன்னொரு மனிதனிடம் தொடர்பு கொண்டே ஆகவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு அவன் கண்டு, கற்று, வளர்த்துக்கொண்டது தான் மொழி அதாவது பேச்சு.
இப்போது குரானின் ஒரு வசனத்தைப் பார்க்கலாம்.

Sunday, August 22, 2010

ஐநா தலைமையகம் முன் சிவந்தன்

காணொளியில் புதியது


லண்டனிலிருந்து ஜெனீவா வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்ட சிவந்தனுக்கு ஐநா தலைமையகம் முன் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி


Wednesday, August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக….

தருமி ஐயா தொடங்கி வால் பையன் ஊடாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உமா சங்கருக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து எழுதப்படும் கண்டன இடுகைகள் அதிகரித்து வருகின்றன.

ஒரே நாளின் ஒரே பதிவில் எதிர்ப்பைத் தெரிவிப்பது எனும் யோசனை நன்றாக தெரிந்ததனால் செவ்வாய் இரவுவரை காத்திருந்தேன், தருமி ஐயாவோ, வால்பையனோ எந்த பதிவையும் பரிந்துரைத்ததாக தெரியவில்லை. இன்று காலை தருமி ஐயா இட்ட நான்கு வரி பதிவு தேவையான சீற்றத்துடன் இல்லாமல் மென்மையாக இருப்பதாக படுகிறது. அதேநேரம், அவசரமாக ஒரு பதிவை எழுதி வெளியிடுவதும் சிறப்பாக இருக்காது என தோன்றியதால் உமாசங்கர் குறித்து வினவு தளத்தில் வெளியான ஒரு கட்டுரையையே மீள்பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து படிக்க

Tuesday, August 17, 2010

தோழர்களின் போராட்டக் களத்தில் நான்

நூலகத்தில் புதியது


தோழர்களின் போராட்டக் களத்தில் நான். தண்டேகாரண்யப் பகுதியில் மாவோயிஸ்டுகளை சந்தித்து, அவர்களின் வாழ்வு போராட்டம் பற்றி அருந்ததி ராய் எழுதிய நீள் கட்டுரையின் தமிழ் வடிவம்


Sunday, August 15, 2010

சுதந்திரம் என்றொரு கற்பிதம்

இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது.


முழுமையாக படிக்க

Saturday, August 14, 2010

மற்றவள் - குறும்படம்

காணொளியில் புதியது


9. மற்றவள் - குறும்படம் குழந்தை உழைப்பும் கல்வியும் வர்க்கங்களுக்கிடையில் எப்படி வேறுபட்டதாய் இருக்கிறது என்பதை பொட்டிலறைந்தாற்போல் புரியவைக்கும் குறும்படம்





Thursday, August 12, 2010

கொலைகார “டௌ” வே வெளியேறு

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ
கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!


போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..
போபால் – காலம் கடந்த அநீதி


அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.


1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.


அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.


தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்


குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.
இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.


26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.


இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.


காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.


நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..


கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!


முற்றுகை
ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,


பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.


அனைவரும் வருக‌
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி
-
தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506


நன்றி: வினவு